
வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது வரையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றி வந்த எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் மே 06ஆம் திகதியுடன் முடிவடைவடைந்த காரணத்தினால், குறித்த பதவிக்கு சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்போது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாவார்.