
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலிஓய பிரதேசத்தின் காதி நீதிமன்ற நீதிபதியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
குறித்த நீதிபதி விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பினை விரைவாக வழங்குவதற்காக 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.