முன்னாள் அமைச்சர் டயானாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 07 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும் பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்றையதினம் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தால், குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply