இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!

கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இடம்பெறும் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏலவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட யாராக இருந்தாலும், அங்கு சென்று இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பனாகொட – போதிராஜாராமய மற்றும் நாரம்பிட்டி இராணுவ வைத்தியசாலையில், இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான சைனோபாம் முதலாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பொதுமக்களுக்கு தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள மையங்களிலும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir