காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 28.09.21 காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக சென்றவர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நவாலி பகுதியில் இருந்த கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir