பிரான்ஸின் பத்திரிகை நிறுவனமான AFP இல் உக்ரைன் காணொளி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் அர்மான் சோல்டின் என்பவர் கடந்த செவ்வாயன்று கிழக்கு உக்ரைனில் சாசிவ் யார் அருகே நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த AFP பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு உக்ரைனில் பல மாதங்களாக நடந்த சண்டையின் மையப்பகுதியான பாக்முத்திற்கு அருகில் உள்ள புறநகர்ப் பகுதியில் மாலை 4:30 மணியளவில் (1330 GMT) குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
AFP ஊடகக் குழு உக்ரேனிய வீரர்களுடன் இருந்தபோதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
32 வயதான சோல்டின் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஏவுகணை தாக்கியதில் கொல்லப்பட்டதாகவும் ஏனையோர் காயமின்றித் தப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
T01