ஸ்ரீலங்காவில் எரிபொருள் விற்பனைக்காக களமிறங்க போகும் சீன நிறுவனம்!

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் எனும் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply