ஹொங்கொங்கில் உள்ள அங்காடி ஒன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் 39 வயதுடையவர் எனவும், ஹொங்கொங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர், ஒரு பெண்ணை கத்தியால் தாக்கிய போது, அதனை தடுக்க வந்த மற்றைய பெண்ணையையும் கத்தியால் குத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கத்திக் குத்துக்கு இலக்காகிய 22 மற்றும் 26 வயதுடைய பெண்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ஹொங்கொங் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கான காரணம் தொடர்பில் ஹொங்கொங் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.