கஜேந்திரகுமாரின் இருப்பை அழிக்கும் திரைமறைவு சதி – சீமான் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலுக்கு தமிழகத்திலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் அழித்தொழிக்கும், ஸ்ரீலங்கா இனவெறி அரசின் திரைமறைவு  சதிச்செயலே இந்த கொலைமுயற்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

அவரை சுட்டுப் படுகொலை செய்வதற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறி அடக்குமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதை இந்த சம்பவம் மூலமாவது பன்னாட்டுச்சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply