இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கப்பல் சேவை இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சேவையை இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார்டில்லியா குரூஸ், என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பல், மாலை 5 மணியளவில், அமைச்சர் சர்பானந்தா சோனோவால், சென்னை கப்பல் முனையத்திலிருந்து கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, சென்னையின் கிழக்கு கடற்கரையை, கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சோனோவால் தெரிவித்துள்ளார்.