முன்னணியின் பெண் அமைப்பாளர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவன் உத்தரவு பிறப்பித்துள்ளாார்.

குறித்த பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்திய போது, கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மருதங்கேணி பொலிஸ் அதிகாரிகள் உட்பட்ட 10 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு பிணை வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து தமது வாதத்தை முன்வைத்திருந்தனர்.

அவர்களின் வாதத்தின் அடிப்படையிலேயே எதிர்வரும் 7ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரனின் வீடு, நேற்று இரவு 10.30 மணியளவில் மருதங்கேணி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திய இரண்டு நபர்கள்,  விரைவில் கைது செய்து விடுவோம் என பெண் அமைப்பாளரை மிரட்டியதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply