வெளிப்பட்டதா சுமந்திரனின் கபட நாடகம்? சம்பந்தனின் புதிய காய் நகர்த்தல்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்றெவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கான கூட்டமாக இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த இரண்டு வருடங்களாக கட்சி விவகாரங்களிலோ, கட்சியின் அரசியல் குழு கூட்டங்களிலோ மற்றும் மத்திய குழுக்கூட்டங்களிலோ இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் தற்போது, எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் உருவாகும் குழு, தனக்கு எதிராக திரும்பியுள்ளதாக இரா.சம்பந்தன் உணர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உடைந்ததற்கும் இந்த குழுவே  பின்னணியில் இருந்ததாகவும் இரா.சம்பந்தன் சந்தேகிப்பதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர் தெரிவில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பந்தனினால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களை,  திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச. குகதாசன் நிராகரித்திருந்தார்.

இந்த பின்னணியில் தமிழ் அரசு கட்சியை கட்டுக்குள் கொண்டு வரும் நகர்வுகளை சம்பந்தன் தீவிரமாக ஆரம்பித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கட்சியின் அடுத்த தலைவராக எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியே அல்லாத வேறு ஒருவரை நியமிப்பதென்றும், செயலாளராக மாவை சேனாதிராசாவை நியமிப்பதென்றும் இரா.சம்பந்தன் தீர்மானித்து காய்நகர்த்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, தனது கொழும்பு இல்லத்தில் அரசியல் குழுக்கூட்டத்தை நடத்துமாறு தமிழரசு கட்சி தலைவர் மவை.சேனாதிராசவுக்கு சம்பந்தன் பணித்துள்ளார்.

இதனை ஏற்ற மாவை சேனாதிராசா, அரசியல் குழு கூட்டத்தை இன்று நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் சில கண்டிப்பான முடிவுகளை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் குழு உறுப்பினர்களாக இரா.சம்மந்தன், மாவை சேனாதிராசா, பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம், சீ.வீ.கே சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், குலநாயகம், குகதாசன், சட்டத்தரணி தவராசா ஆகியோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply