இராணுவ பேருந்து மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு!

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில், இராணுவ பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவ பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply