மானிப்பாய் – காரைநகர் வீதியில் எந்நேரமும் ஆபத்தான நிலையில் அனைவரும் பயணிப்பதாக சித்தங்கேணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் – காரைநகர் வீதியில் பயணிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில் காலைக்கதிர் மேற்கொண்ட பிரத்தியேக தகவல் சேகரிப்பின்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
நீண்ட காலமாக மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைக்கப்படாத நிலையில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாகவும் அதனால் வீதியை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும், குறித்த மக்களின் போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே, மானிப்பாய் – காரைநகர் வீதியூடாக பயணிக்கும் சாரதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எமது காலைக்கதிர்TV வலையொளி குழுவினர் பிரத்தியேக தகவல் சேகரிப்பொன்றை முன்னெடுத்திருந்தனர்.
– குறித்த செய்தியின் முழுமையான காணொளி