தேசிய மக்கள் சக்தியால் போராட்டம் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்து” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் அமைந்திருந்தது.

இந்த போராட்டம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று மாலை நடைபெற்றது.

போராட்டத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது எனவும், தேர்தல் பிற்போடப்பட்டு மூன்று மாதங்களாகின்ற நிலையில், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பில் இருந்து உரிய தலையீடுகள் இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், மக்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.

போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply