பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.