கண்டி – மஹியங்கனை வீதியின் குருலுபொதவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிசுவொன்று உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று நேற்று இரவு பிரேக் செயலிழந்ததால் மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், பிபில பகுதியைச் சேர்ந்த ஆறு மாதங்களே ஆன சிசு உயிரிழந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பஸ் சாரதி உட்பட 8 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் மஹியகனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.