நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும்! – ரஞ்சித் நம்பிக்கை

இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று(12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” பணவீக்கம் இவ்வளவு விரைவாக குறையும் என்று சர்வதேச அளவில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இலங்கை மத்திய வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவும் 2024 ஆம் ஆண்டில் வளமான பொருளாதாரத்தை நோக்கி இலங்கை நகரும் என அறிவித்துள்ளது, அதற்காக தனது பங்களிப்பை வழங்க இலங்கை உறுதியாக வேண்டும் “, எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply