35 வயதான வைத்தியர் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு!

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றி வரும் 35 வயதுடைய வைத்தியர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த வைத்தியர் சேவைக்கு சமுகமளிக்காததால் சிற்றூழியர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.

அதன்போது, அவர் விடுதியினுள் உயிரிழந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply