மக்களின் பணத்தை வீணடிக்கும் இலங்கை அரசாங்கம் – கடுமையாக சாடும் பெப்ரல் அமைப்பு!

இலங்கை அரசாங்கம் முழுமையான தேர்தல் திருத்தத்தை மேற்கொள்ளத் தயாராகிறது என்றால், எல்லை நிர்ணயம் ஏன் செய்யப்பட்டது என பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசுகின்றது. அப்படியானால் ஜனாதிபதி தேர்தலுக்கான பணம் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு எப்படி பணம் கிடைக்காமல் போகும்? எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை இலங்கை அரசாங்கம் சட்டப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் இலட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது.

ஆகவே, அரசாங்கத்தின் இந்ததீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர், அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்பட வேண்டிய தேர்தலை, நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது, தேர்தல் திருத்தத்தை மேற்கொள்வதற்கா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் பொதுப் பணத்தைத்  அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாகச் செலவு செய்யலாமா எனவும், அரசியல் அதிகாரத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் மட்டுமே அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தெளிவாகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை நடத்துவது என்பது ஒரு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தான்.

அந்த உரிமையையும் ஜனநாயகத்தையும் சிதைக்கும் மக்கள் விரோதச் செயலில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply