பொகவந்தலாவை – கொட்டியாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்துள்ளனர்.
யாழ்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து சென்று எதிர்வரும் 16 ஆம் திகதி நிறைவு செய்வதாக இவர்களின் சாதனை பயணம் அமைந்துள்ளது.
இதேவேளை,ஏற்கனவே இவர்கள் யாழ்ப்பணத்தில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்களில் நடந்து சென்றும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்தில் பயணித்தும் சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்ககளில் நடந்து சென்றும் சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
T02