பாகிஸ்தானில் பிபர்ஜாய் புயலால் மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பாகிஸ்தானின் கடலோரப் பகுதிகளிலிருந்து சுமார் 66 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

புயலின் பாதிப்புக் குறித்து நாளை தெரியும் எனக் கூறிய அவர், புயலிலிருந்து பாதுகாப்புப் பெற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply