உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, முதற்கட்டமாக அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால் அதிகாரியை பொலிஸ் தலைமை அதிகாரி பணி இடைநீக்கம் செய்தார்.

இதனடிப்படையில், இம்மாதம் 14 ஆம் திகதி முதல் அவரை சேவையிலிருந்து இடைநீக்கம் செய்து பொலிஸ் தலைமையகம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply