பலாதோட்டையில் ஆணோருவர் வெட்டிக்கொலை

களுத்துறை, பலதோட்டை, கொடபரகஹேன பிரதேசத்தில் நேற்று இரவு ஆணோருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுத்துறை, பலதோட்டை பிரதேசத்தை சேர்ந்த, 43 வயதுடைய சுஜித் தர்மசேன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில் தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply