இணைய வழி ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிரதேச செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.