களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சுற்றத்தாரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் 42 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசிந்துவந்தார் எனவும் முதற்கட்ட விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன் அவர் சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களனி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
T02