அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகளுடன், நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செலவுகளை ஈடுசெய்வது தொடர்பான, விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் முறையான தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகப் போவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
மேலும் நிதி தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது எனவும், சுகாதார துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு ஆதரவு வழங்கும் என பதில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.