சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

புலோலி பகுதியில், சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலானது நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் இமையாணன் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய தர்மலிங்கம் கஜேந்திரன் என்ற இளைஞனே  காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கஜேந்திரன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வார்ப்பு நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து செயற்பட்டமையும், பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply