இலஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் கைது

சீதாவாக்கை நகர சபையின் அதிகாரிகள் இருவர் 400,000 ரூபாய்களை இலஞ்சமாகப்  பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில், நகரசபை செயலாளர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று, அவிசாவளையைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பேருந்து நிலையத்தில் உள்ள புதிய வர்த்தக நிலையத்தில், கடையொன்றின் உரிமையைத் துரிதமாக மாற்றுவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்ட போதே இருவரும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply