போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, யுத்தக் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை செய்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம் சாட்டலாம். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கூட குற்றஞ்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூடிமறைக்கின்றது என எவரும் தெரிவிக்க முடியாது.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் காணப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.