அதிர்ச்சியை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சியாளரின் பேட்டி

கொரோனா பெருந்தொற்று சீனாவால் நடத்தப்பட்ட உயிரி தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டின் வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சாவோ ஷாவோ என்ற குறித்த ஆராய்ச்சியாளர், பத்திரிகை நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர், கொரோனா வைரஸ், சீனாவினால் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் என்றார்.

கொரோனா பரவத் தொடங்கிய 2019 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனா வைரசின் 4 திரிபுகளை தனது நண்பர்களிடம் கொடுத்து, அதில் எது அனைத்து உயிரினங்களிலும் எளிதாக பரவுக் கூடியது என கண்டறியச் சொன்னதாக அவர் கூறியுள்ளார்.

2019 இல் சீனாவில் நடைபெற்ற இராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த பல்வேறு நாடுகளின் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும், வீரர்களுக்கு கொரோனா வைரஸை பரப்பவே அவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சீன ஆராய்ச்சியாளரின் இந்த பேட்டியானது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply