ஒஸ்கார் விருது வழங்கும் தேர்வு குழுவில் தென்னிந்திய இயக்குநரான மணிரத்னம் இடம்பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு ஒஸ்கார் விருதுகள் வழங்கும் தேர்வுக்குழுவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்து 398 உறுப்பினர்கள் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், இந்தியாவிலிருந்து இயக்குனர் மணிரத்னம், நாட்டு நாட்டு பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி, அதன் பாடலாசிரியர் சந்திரபோஸ், நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், நடிகர் சூர்யாவும் அந்தக் குழுவில் அங்கத்தவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.