அமெரிக்காவில் ரயில் – லொறி விபத்து : 16 பேர் காயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு சென்ற பயணிகள் ரயில், லொறியுடன் மோதுண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரயிலில்,200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாகவும். தண்ணீர் ஏற்றிக் கொண்டு சென்ற லொறி ஒன்று தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது, லொறி மீது ரயில் மோதி தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கிய 16 பேரை பத்திரமாக மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply