எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நிலையான நாட்டை நோக்கி – அனைவரும் ஒரே பாதையில்” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயங்களை குறிப்பிட்டார்.