யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் கைதிகள் விடுவிக்கப்படும் நிலையில், இங்கு அநீதியானதொரு சட்டம் தான் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் ஊழல் தடுப்பு சட்டமூல விதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத் தடைச்சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை  கடந்த அரசாங்கமும் ஏற்றுக் கொண்டது.

தற்போது 19 பேர் இந்தச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரத்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply