ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் பட்டியலில் ஹசரங்க!

ஜூன் மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்குரிய பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இடம்பிடித்துள்ளார்.

ஸிமப்பாவ்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கையின் முதல் மூன்று போட்டிகளிலும் 5 விக்கெட் குவியல்களைப் பதிவு செய்ததன் மூலம் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஹசரங்கவின் பெயர் இடம்பெறுகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்திய அவுஸ்திரேலிய வீரர் ட்ரவிஸ் ஹெட், ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 3 சதங்கள் குவித்த ஸிம்பாப்வே வீரர் சோன் வில்லிம்ஸ் ஆகியோரின் பெயர்களும் ஜூன் மாதத்தின் சிறந்த விரருக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply