இந்தோனேசியாவில் பதிவாகிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 1.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கிலோமீற்றர் தொலைவில் 131 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும்,இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5 மணியளவில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply