முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்றும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்துக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply