ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே ஊடகங்கள் மத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
திருகோணமலை, சேருவில மற்றும் மூதூர் ஆகிய தேர்தல் தொகுதிகளில் அனைத்து விதமான தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கு தேவையான அளவு கட்சியைப் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாட்டில் காணப்படும் வங்குரோத்து நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நீங்கும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒரே நம்பிக்கை எனவும் தெரிவித்தார்.
மேலும் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.