இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
” இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர்.
எனினும் இலங்கை மக்களிற்கே உரிய மிகவும் நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை. இலங்கை நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்வது குறித்து சிந்திக்க முடிகின்றது.
தற்போதைய சூழ்நிலை உருவாகுவதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம்.
இந்த அற்புதமான தீவுக்கான மகத்தான வாய்ப்புகளை ஆராயும் தருணம் தற்போது வந்துள்ளது மீள்புதுப்பிக்கத்தக்க சக்திதுறைமற்றும் சுற்றுலாத்துறை ஆகியன அதிக திறன் கொண்ட துறைகளாகும் ” எனக் குறிப்பிட்டார்.