பௌத்த மத குருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த புலம்பெயர் சமூகத்தினரால் திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அதற்காக நிதி வழங்குகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உள்நாட்டு சூழ்நிலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற நிலையில் பௌத்த மத குருமாரும் பலவீனமான நிலையில் உள்ளனர். அவர்கள் குற்றச்செயல்களிற்கு பலியாகலாம்.
தற்போதைய பொருளாதார சமூக சூழ்நிலைகளில் பௌத்த மத குருமார் ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த நாட்டின் பௌத்த மத குருமாரும் மக்களும் சரியான பாதையை பின்பற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
பௌத்த மத குருமார் என்ற அடிப்படையில் நாங்கள் வீடியோக்களில் காணப்படும் சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
சமீபத்தைய சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை நன்கு திட்டமிடப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்த மத குருமாரின் கௌரவத்தை அதிகாரத்தை குறைப்பதற்காக இவை முன்னெடுக்கப்படுகின்றன.
அரச சார்பற்ற அமைப்புகள் இதனை முன்னெடுக்கின்றன. இதற்காக பெருமளவு பணம் புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து கிடைக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தாங்கள் தகவல்தொழில்நுட்ப துறையினர் மற்றும் கற்றவர்களுடன் இது குறித்து ஆராய்ந்ததாகவும், இதன் மூலம் இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து தாங்கள் வெட்கமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.