இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவை அமைச்சர் ஹரின்பெர்ணாண்டோவும் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரியவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளனர்.
தனுஸ்ககுணதிலக தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளதுடன் இது குறித்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தன்னை வந்து பார்த்தமைக்காக அமைச்சருக்கும் சனத்ஜெயசூரியவிற்கும் தனுஸ்க நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபரில் டி20 உலககிண்ணப்போட்டிகளுக்காக இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை அங்கு பாலியல்வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை தனுஸ்ககுணதிலக எதிர்கொண்டுள்ளார். அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோவும் சனத்ஜெயசூரியவும் அவுஸ்திரேலியாவில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.