மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவை, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர் பழக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்தது.
கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (04) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.