ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் – நினைவு கூறும் நிகழ்வுகள் எதுவும் தேவையில்லை! ரணில் பணிப்புரை

தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் பதவியேற்பை நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பதவியேற்பை நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று எதிர்வரும் 21ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

கடந்த வருடம் ஜுலை மாதம் 20ம் திகதி நாடாளுமன்றில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜூலை 21 ஆம் திகதி நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

நெருக்கடியில் இருந்து நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பதவியேற்பை நினைவு கூறும் விழாவொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் விசுவாசமான கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்வதற்கு பொதுப் பணத்தையோ அல்லது தனியார் பணத்தையோ செலவிட வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply