தாயகப் பகுதி அதிகாரப் பகிர்வை இழுத்தடிப்பு செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்!

இலங்கையில், சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை எட்டும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

கையில் உள்ளவற்றை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள்.

தமிழர் தாயப்பகுதியின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இழுத்தடிப்பு செய்யும் அரசியல் கட்சிகள் அவற்றினை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும் 13 வது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகிவரும் நிலையில் சில தமிழ் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை,

நிராகரிக்கின்றோம் என்று சொல்வது அவர்களுக்கு ஏற்றதாகயிருக்கலாம் ஆனால் நீண்டகாலமாக வடகிழக்கில் இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply