இலங்கை – இந்திய நில இணைப்புத் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் நில இணைப்பு யோசனை தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நில இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலின் யோசனைக்கு இந்தியா மற்றும் இலங்கை தலைவர்களும் இதை முன்னோக்கி கொண்டு செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை தொடர்பான ஆரம்ப கட்ட சாத்தியக்கூறு குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்து முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.