அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 321.10 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 334.55 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
ஒப்பீட்டளவில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலலொன்றின் கொள்வனவுப் பெறுமதி 318.72 ரூபாவாகவும் , விற்பனை பெறுமதி 331.87 ரூபாவாகவும் இருந்தது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது சந்தை பங்கேற்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.