பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழுமையான ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஐயகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம், கதவடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் கூட இலங்கை பொலிஸார் மட்டுமே காணப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பு இன்றியே மேற்கொள்ளப்பட்டது. இந்த அரசு தமிழருக்கு தொடர்ந்தும் அநீதியை இழைத்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சனையை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தாது தங்களுக்குள்ளேயே மறைத்து கொண்டிருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு வெளிப்படையான தீர்வினைப் பெற வேண்டும். சுதந்திரமாக நினைவேந்தல்களை கூட மேற்கொள்ள முடியாது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த, காணாமலாக்கப்பட்ட உறுவுகளுக்கு நீதி வேண்டும். அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவினை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் அழைப்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண கதவடைப்புப் போராட்டத்தை மேற்கொள்வதுடன் அன்றைய தினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply