தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக பேருந்து விபத்து – 77 பேருக்கு காயம்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பல்கலைக்கழக பேருந்து மற்றுமொரு பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த பேருந்து பல்கலைக்கழகத்தின் முன் பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பேருந்து இதன்மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 77 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்தவர்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply