யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வரும் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பிடிங்கி அகற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த அதிகாரியிடம் கடற்றொழிலாளர்கள் வினவியபோது அனுமதியைப் பெற்று தொழிலை மேற்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தாகவும் தகவலர் வெளியாகியுள்ளது.
இதற்கான அனுமதி பெறுவதற்கு பல மாதங்களாகும் எனவும், அதுவரை தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதோடு, தமது பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படையும் எனத் தெரிவிக்கும் கடற்றொழிலாளர்கள், தமக்கு மன்னிப்பளித்து, அனுமதி கிடைக்கும் வரை தொழிலை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.
எனினும் வலைகள் திரும்ப வழங்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர். 150ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக மேற்கொண்ட தொழிலை எதுவித முன்னறிவித்தலுமன்றி அகற்றப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள் யாழ் பாசையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் ஊடக சந்திப்பையும் மேற்கொண்டனர்.